Published : 10 Jul 2023 06:37 PM
Last Updated : 10 Jul 2023 06:37 PM
விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் பரவி வந்தன. அண்மையில் வெளியான படத்தின் ‘நாரெடி தான் வரவா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Mission successful ah mudinchu
Oct 19th kondaadi kolutha ready aagikonga nanba
It’s a shoot wrap for #LEO#Thalapathy @actorvijay sir, @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @7screenstudio @trishtrashers @duttsanjay @akarjunofficial @SonyMusicSouth#LEOShootWrap pic.twitter.com/GyPYXsM4ul— Seven Screen Studio (@7screenstudio) July 10, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment