Published : 03 Jul 2023 06:34 AM
Last Updated : 03 Jul 2023 06:34 AM
சென்னை: தமிழில் பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸ் ஆகாத வாரங்களில், சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வெளியாவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் 23-ம் தேதி, தண்டட்டி, தலைநகரம் 2, பாயும் ஒளி நீ எனக்கு உட்பட 8 திரைப்படங்கள் வெளியாயின. ஜூன் 29-ம் தேதி, பெரிய பட்ஜெட் படமான, ‘மாமன்னன்’ மட்டும் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் ஜுலை 7-ம் தேதி 7 திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெற்றி நடித்துள்ள ‘பம்பர்’, நட்டி நடித்துள்ள ‘இன்பினிட்டி’, முனிஷ்காந்த் நடித்துள்ள ‘காடப்புறா கலைக்குழு’, ஹரி உத்ரா இயக்கியுள்ள ‘வில்வித்தை’, புதுமுகங்களின் ‘எப்போதும் ராஜா’, கிருஷ்ணா நடிக்கும் ‘ராயர் பரம்பரை’, குழந்தைகள் படமான ‘லில்லி’ ஆகிய 7 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடைசி நேரத்தில் சில படங்களின் வெளியீடு தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT