Published : 02 Jul 2023 01:10 PM
Last Updated : 02 Jul 2023 01:10 PM

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ‘வில்வித்தை’

உத்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் செ.ஹரி உத்ரா இயக்கியுள்ள படம், 'வில் வித்தை'. இதில் அருண் மைக்கேல் டேனியல், ஆராத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜானகி, வைஷ்ணவி, குணா, எஸ்.எம்.டி. கருணாநிதி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவகுமார் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏஜே அலிமிர்சாக் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் ஹரி உத்ரா கூறியதாவது: 'தெரு நாய்கள்', 'படித்தவுடன் கிழித்து விடவும்', 'கல்தா' படங்களை அடுத்து இதை இயக்கியுள்ளேன். இது சைக்கோ த்ரில்லர் வகை படம் ஆகும். வழக்கமான சைக்கோ த்ரில்லர் கதையாக இருக்காது. பரபரப்பாகப்பேசப்பட்ட சில உண்மைச் சம்பவங்களின் தாக்கத்தில் இதை இயக்கி உள்ளேன். நாயகனாக நடித்துள்ள அருண் மைக்கேல் டேனியல் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு இது முதல்படம் என்றாலும் 2 கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜூலை 7 -ல் படம் வெளியாகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x