Published : 01 Jul 2023 02:30 PM
Last Updated : 01 Jul 2023 02:30 PM

2 நாட்களில் ரூ.10 கோடி வசூலை தாண்டிய ‘மாமன்னன்’

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.10 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியான முதல் நாள் ரூ.6 கோடியையும், இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 30) 5 கோடி வசூலையும் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படம் 2 நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ.10 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் அதிக திரைகளில் வெளியான படம் ‘மாமன்னன்’ என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > மாமன்னன்: திரை விமர்சனம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x