Published : 23 Jun 2023 12:36 PM
Last Updated : 23 Jun 2023 12:36 PM

ஹரிஷ் கல்யாணின் புதிய படம் ‘பார்க்கிங்’

சென்னை: ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்துக்கு ’பார்க்கிங்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து, த்ரில்லர் படம் ஒன்றில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ‘பார்க்கிங்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x