Published : 04 Oct 2017 11:31 AM
Last Updated : 04 Oct 2017 11:31 AM
பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் 'மெர்சல்' திரையிடப்பட இருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளதால் ட்விட்டர் எமோஜி, ஃபேஸ்புக் மெசன்ஜர் என பல்வேறு வகைகளில் 'மெர்சல்' படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
இந்நிலையில், இப்படம் பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் அக்டோபர் 18-ம் தேதி திரையிடப்படவுள்ளது. சுமார் 2200 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான திரையரங்கம் 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரையரங்கில் 'கபாலி' மற்றும் 'பாகுபலி' ஆகிய படங்களைத் தொடர்ந்து திரையிடப்படவுள்ளது 'மெர்சல்'.
Le 18/10, venez découvrir le nouveau film avec la superstar @actorvijay : #Mersal ! En tamoul sous-titré / Résa : https://t.co/w3c6exP4Hb pic.twitter.com/sh68dtY7Zn
— Le Grand Rex (@LeGrandRex) October 3, 2017
இத்தகவலை 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளிலேயே 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' தான் மிகவும் பெரியது என்பது சிறப்புக்குரியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT