Last Updated : 29 Oct, 2017 04:53 PM

 

Published : 29 Oct 2017 04:53 PM
Last Updated : 29 Oct 2017 04:53 PM

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக விஷால் 10 லட்சம் நிதியுதவி

ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கைக்காக, விஷால் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானும் 25 ஆயிரம் டாலர் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காக விஷால் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள். எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன்.

உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x