Published : 24 Oct 2017 10:20 AM
Last Updated : 24 Oct 2017 10:20 AM
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் குடும்பத்தினர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 'கொலைகாரன்' என்ற தலைப்பில் இயக்குநர் சுசீந்திரன் கடுமையாக சாடியிருக்கிறார்
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (திங்கள்கிழமை) தீக்குளித்தனர். கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.
அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி காருண்யா, அட்சயா பரணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூகவலைதளத்தில் பலரும் தங்களுடைய பேரதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து 'கொலைகாரன்' என்ற தலைப்பில் இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
கந்துவட்டி ஒரு பாவச்செயல், கந்துவட்டி ஒரு பெருங்குற்றம், கந்துவட்டி மனித நேயமற்ற செயல், கந்துவட்டி கொலைக்கு நிகரான செயல். கந்துவட்டிக்காரன் மனித உணர்வுகளையும், மனித உயிர்களையும் உறியும் ஒரு அட்டபூச்சி.
இவனை விட மோசமானவன், அயோக்யன், யார் என்றல் இவர்களை பாதுகாக்கும் அரசியல்வாதிகளும் பதவியில் இருப்பவர்களும் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT