Last Updated : 21 Oct, 2017 05:09 PM

 

Published : 21 Oct 2017 05:09 PM
Last Updated : 21 Oct 2017 05:09 PM

சங்கமித்ரா நாயகியாக திஷா பதானி ஒப்பந்தம்: படக்குழு அறிவிப்பு

'சங்கமித்ரா' நாயகியாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது

'மெர்சல்' தொடர்பான சர்ச்சை பெரிதாக போய் கொண்டிருக்கும் நிலையில், 'சங்கமித்ரா' திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இரண்டிற்குமே ஒரே தயாரிப்பாளர் என்பதால், சமூக வலைதளத்தில் பெரிதாக விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 'சங்கமித்ரா' படத்தின் நாயகியாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படம் 'சங்கமித்ரா'. கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இப்படத்திலிருந்து விலகினார் ஸ்ருதிஹாசன்.

'சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரங்குகள், கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

'சங்கமித்ரா' படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடிக்கவிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குநராக சாபுசிரில் பணிபுரிந்து வருகிறார். பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x