Published : 30 Oct 2017 08:38 PM
Last Updated : 30 Oct 2017 08:38 PM

தமிழகத்தில் 100 கோடி வசூலைக் கடந்து மெர்சல் சாதனை

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'மெர்சல்', தமிழக வசூலில் 100 கோடியைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது 'மெர்சல்'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் யாருக்குமே வெளியீட்டு உரிமையை அளிக்காமல், விநியோக அடிப்படையிலே வெளியிட்டது.

விஜய் படம், ஜிஎஸ்டி வசன சர்ச்சை, பிஜேபி கட்சியினரின் தொடர் சாடல்கள் போன்றவற்றால் தொடர்ச்சியாக வசூலைக் குவித்து வருகிறது. மேலும், தமிழக மொத்த வசூலில் 100 கோடியைக் கடந்திருக்கிறது. விஜய் படங்களில் தமிழகத்தில் 100 கோடி வசூலைக் கடந்த முதல் படம் 'மெர்சல்' என்பது குறிப்பிடத்தக்கது.

'எந்திரன்' திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் 110 கோடி வரை இருக்கும் என விநியோகஸ்தர் தரப்பில் தெரிவித்தார்கள். அதனை விரைவில் 'மெர்சல்' முறியடிக்கும் எனவும் குறிப்பிட்டார்கள். கேரளாவில் விஜய் படங்களுக்கு பெரிய வசூல் இருக்கும். அங்கும் முந்தைய விஜய் படங்களின் அனைத்து வசூல் சாதனையையும் 'மெர்சல்' முறியடித்திருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் திட்டமிட்டப்படி 'அதிரந்தி' வெளியாகியிருந்தால் கண்டிப்பாக ஒட்டுமொத்த இந்திய வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும். ஆனால், தணிக்கைப் பிரச்சினையில் இன்னும் வெளியாகாமல் இருப்பது படக்குழுவுக்கு பெரிய பின்னடைவு தான் என்று பிரபல விநியோகஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் 'மெர்சல்' சாதனை புரிந்து வருகிறது. விஜய்யின் இந்த வசூல் வளர்ச்சியால், அடுத்து அவர் நடிக்கவுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும், 'மெர்சல்' செய்து வரும் சாதனைகளால் விரைவில் உலகளாவிய 'எந்திரன்' படத்தின் வசூல் சாதனையை கண்டிப்பாக முறியடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

தயாரிப்பாளருக்கு லாபம்?

தமிழகத்தில் 100 கோடி வசூலை கடந்திருந்தாலும், ஜிஸ்டி வரி, கேளிக்கை வரி, விநியோகஸ்தர் பங்குத் தொகை, திரையரங்கு உரிமையாளரின் பங்குத் தொகை என அனைத்தும் போக தயாரிப்பாளருக்கு கிடைக்கும் பணம் குறைவாகவே இருக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x