Published : 16 Oct 2017 11:53 AM
Last Updated : 16 Oct 2017 11:53 AM
கேளிக்கை வரியை நீக்கி சினிமாவை காக்க வேண்டும் என்று இயக்குநர் சீனுராமசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சமீபத்தில் தமிழக அரசுடன் நடைபெற்ற திரையரங்க டிக்கெட் விற்பனை மற்றும் கேளிக்கை வரி தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றுள்ளது.
இப்பேச்சுவார்த்தையின் முடிவில் டிக்கெட் விலை + ஜிஎஸ்டி + 8% கேளிக்கை வரி என்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்த முடிவு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
திரைப்படங்கள் ஓடும், ஓடாது என்ற தொழில் நிலையாமையை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. தவிர மற்ற கேளிக்கை வரியை நீக்கி சினிமாவை காக்க எனது வேண்டுகோள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT