Published : 17 Jun 2023 06:09 PM
Last Updated : 17 Jun 2023 06:09 PM

‘சார்பட்டா பரம்பரை’ குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் காலமானார்

சென்னை: ‘சார்பட்டா பரம்பரை’ குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் உடல்நலக்குறைவால் காலாமானர். அவருக்கு வயது 68.

மாரியப்பன் முத்துலட்சுமிக்கு தம்பதிக்கு 15-06-1955-ல் பிறந்தவர் பாக்ஸர் ஆறுமுகம். குத்துச்சண்டையில் மிகவும் ஆர்வம் உடைய இவர், கடந்த 1980 காலக்கட்டத்தில் குத்துச்சண்டை போட்டிகளில் ‘சார்பட்டா பரம்பரை’க்காக ஆடிவந்தார். ‘நாக் அவுட் கிங்’ என பலராலும் பாராட்டப்பட்டவர்.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், இவரிடம் நேரடியாக வந்து சார்பட்டா பரம்பரையின் கதையைக் கேட்டு, அதற்கு பின்னர் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கினார். கடந்த 1985-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடிகாட் ஆக இருந்துள்ளார் பாக்ஸர் ஆறுமுகம். பிரபல குத்துச்சண்டை வீரரான இவர், ‘வா குவாட்டர் கட்டிங்’, ‘தண்ணில கண்டம்’, ‘ஆரண்ய காண்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், முச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட பாக்ஸர் ஆறுமுகம் வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இவர், சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x