Published : 11 Oct 2017 12:59 PM
Last Updated : 11 Oct 2017 12:59 PM
'100% லவ்' தமிழ் ரீமேக்கான '100% காதல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு சென்னையில் இன்று (அக்டோபர் 11) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுகுமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நாயகனாக நடித்து, இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். நாயகியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார். எம்.எம். சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று முதல் முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு. 2018 கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '100% லவ்'. 2011-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. சுகுமார் இயக்கியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT