Published : 06 Oct 2017 03:49 PM
Last Updated : 06 Oct 2017 03:49 PM
'மெர்சல்' படத்தலைப்பு தலைப்பு சர்ச்சை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
'மெர்சல்' படத்தலைப்பை உபயோகிக்க தடை விதிக்கக் கோரி ராஜேந்திரன் என்ற தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறும், அது வரை 'மெர்சல்' தலைப்பை உபயோகிக்க தடை விதித்தது உயர் நீதிமன்றம்.
இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை தள்ளுப்படி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் திமன்றம். இதனால் 'மெர்சல்' படக்குழு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது. மேலும், 'மெர்சல்' படத்தின் இறுதிகட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. தீபாவளி வெளியீடு உறுதி என்று தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
'மெர்சல்' தலைப்பு சர்ச்சை முடிவு பெற்றது குறித்து தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இது பெயர் அல்ல, உணர்வு. தடைகள் தாண்டி வருகிறார் மெர்சல் அரசன். நம்ம தலைப்பு நமக்கே.
#Mersal #MersalDiwali Idhu Peyar Alla,Unarvu.Thadaigal Thaandi Varugiran #MersalArasan #NammaTitleNamake @MuraliRamasamy4 @ThenandalFilms pic.twitter.com/197j40fryb
— Hema Rukmani (@Hemarukmani1) October 6, 2017
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT