Last Updated : 25 Oct, 2017 10:50 AM

 

Published : 25 Oct 2017 10:50 AM
Last Updated : 25 Oct 2017 10:50 AM

எனது தேசபக்தியை பொது இடங்களில் நிரூபிக்கச் சொல்லி சோதிக்காதீர்கள்: கமல்ஹாசன்

பொதுஇடங்களில் எனது தேசபக்தியை நிரூபிக்கச் சொல்லி சோதிக்காதீர்கள் என கமல் தெரிவித்திருக்கிறார்.

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அந்நாட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நமது தேசியகீதத்தை ஒளிபரப்பலாம்.  எனது தேசபக்தியை பொது இடங்களில் நிரூபிக்க கட்டாயப்படுத்தி பரிசோதிக்காதீர்கள்.

விவாதங்களில் சிங்கப்பூரைப் பற்றி பலரும் உதாரணம் பேசுகின்றனர். சிங்கப்பூரில் இருப்பது கருணைமிக்க சர்வாதிகாரமே என்பதே சில விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. நமக்கும் அதுபோன்ற சூழல் வேண்டுமா? வேண்டாமே!

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x