Published : 11 Oct 2017 01:24 PM
Last Updated : 11 Oct 2017 01:24 PM
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படத்தின் இறுதிப்பாடல் படப்பிடிப்பு நேற்று (அக்டோபர் 10) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பாடலும் மற்றும் சில காட்சிகளும் மட்டுமே '2.0' படத்தில் படமாக்கப்பட வேண்டியதிருந்தது. அதில் பாடல் படப்பிடிப்பு மட்டும் நேற்று (அக்டோபர் 10) முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது.
4 நாட்கள் நடைபெறும் இப்பாடல் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் ஏமி ஜாக்சன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது முடிவடைந்தவுடன் சிறு காட்சிகள் மட்டுமே படமக்கப்பட வேண்டியதுள்ளது. அக்காட்சிகள் முழுவதுமே அக்டோபர் 21-க்குள் முடிக்கவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து துபாயில் அக்டோபர் 27-ம் தேதி பிரம்மாண்டமாக இசை வெளியீடு நடத்த லைகா நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்காக படக்குழுவினரோடு பல்வேறு திரையுலக பிரபலங்களையும் துபாய்க்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக முதல் '2.0' பத்திரிகையாளர் சந்திப்பு அக்டோபர் 26-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 2018-ல் இப்படத்தை உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT