Published : 21 Oct 2017 10:10 AM
Last Updated : 21 Oct 2017 10:10 AM
மறுபடியும் தணிக்கை செய்யாதீர்கள் என்று விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'மெர்சல்' பட சர்ச்சைக்கு தொடர்பாக கமல் தெரிவித்திருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.
ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். சமூகவலைத்தளத்தில் படத்தின் காட்சிகளை நீக்கக் கூடாது என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில், 'மெர்சல்' படத்துக்கு ஆதரவாக கமல் கூறியிருப்பதாவது:
'மெர்சல்' தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. மறுபடியும் செய்யாதீர்கள். எதிர் விமர்சனம் தர்க்க ரீதியான பதிலாக இருக்க வேண்டும். விமர்சிப்பவர்களின் வாயை அடைக்காதீர்கள். இந்தியா வெளிப்படையாகப் பேசும்போது தான் வளரும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT