Last Updated : 31 Oct, 2017 12:36 PM

 

Published : 31 Oct 2017 12:36 PM
Last Updated : 31 Oct 2017 12:36 PM

திமுக-வில் இணையப் போகிறேனா? - கஸ்தூரி கிண்டல்

திமுக-வில் இணையப் போகிறார் என்று வெளியான செய்திக்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பகக்த்தில் பதிலளித்திருக்கிறார்

சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு தனது கருத்துகளை தெரிவித்து வருபவர் கஸ்தூரி. அவ்விவாதங்கள் மூலம் அவர் திமுக-வில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்து கஸ்தூரி கூறியிருப்பதாவது:

நான் திமுக-வில் இணைந்து பணியாற்றப் போவதாக பல இணையதளங்களில் செய்தியை பரப்பி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து என் தலை மறுபடியும் சகட்டுமேனிக்கு உருண்டு கொண்டிருக்கிறது.

இந்தச் செய்தி முற்றிலும் பொய்யான கற்பனையேயன்றி வேறில்லை. நான் சமீபகாலமாக மத்திய, மாநில ஆளும் கட்சிகளின் நடவடிக்கைகளை விமர்சித்ததால் உடனே என்னை திமுக அனுதாபியாக சித்தரித்து உள்ளனர்.

பத்திரிகையாளர்கள் என்னை ஏதாவது அரசியல் கட்சியில் சேர்த்து விடுவது, உறுப்பினர் அட்டை வாங்கி கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. நடுநிலைவாதிகளுக்கு நமது ஊரில் இந்த பிரச்சினை உண்டு தான். ரஜினியை விமர்சித்தபோது பாமக என்றார்கள், சந்தித்தால் ரஜினி ஆதரவாளர் என்றார்கள். கங்கை அமரன் அவர்களுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் ஆதரவு தெரிவித்தேன். அவருக்காக பரப்புரை ஆற்றினேன். அப்பொழுது என்னை பாஜக-வில் இணையப் போகிறேன் என்று பேசினார்கள். அடுத்து சீமான் அவர்களுடன் மேடையில் பேசியதால் நாம் தமிழரில் கஸ்தூரி என்றார்கள். இப்பொழுது திமுக பிரச்சார பீரங்கி என்கிறார்கள். நல்ல வேளை "அடிக்கடி அமெரிக்கா பறக்கிறார். டொனால்ட் டிரம்ப் கட்சியின் கொ.ப.செ ஆக கஸ்தூரி நியமனம்" என்று சொல்லாமல் விட்டார்களே.

எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை நான் அவ்வப்போது சந்திப்பதும் உண்டு. ஆனால், நான் என்னவோ சோத்துக்கட்சி தான்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x