Published : 30 Oct 2017 03:01 PM
Last Updated : 30 Oct 2017 03:01 PM
கார் வாங்கிய விவகாரத்தில் நடிகை அமலாபால் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த வரி ஏய்ப்பால் கேரள அரசுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் எற்பட்டுள்ளதாக கேரள வரித் துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கேரளாவைச் சேர்ந்த அமலாபால் வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் 1 கோடி ரூபாய்க்கு , மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கியுள்ளார்.
இந்தக் காரை கேரளாவில் பதிவு செய்ய 20 லட்ச ரூபாய் கட்ட வேண்டும். எனவே இந்தத் தொகையை தவிர்க்க புதுச்சேரியில் வேறு ஒரு நபரின் பெயரில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி தனது காரை அமலாபால் பதிவு செய்துள்ளார்.
அமலாபால் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் அமலாபால் வரி ஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT