Last Updated : 13 Oct, 2017 05:07 PM

 

Published : 13 Oct 2017 05:07 PM
Last Updated : 13 Oct 2017 05:07 PM

மெர்சல் கதைக்களம்: பிரிட்டிஷ் தணிக்கைத் துறை விளக்கம்

'மெர்சல்' படத்தின் தணிக்கைப் பணிகள் முடிந்தவுடன், அதன் கதைகளத்தை பிரிட்டிஷ் தணிக்கைத் துறை வெளியிட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மெர்சல்'. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 100-வது படம் இதுவாகும்.

தமிழகத்தில் தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுக்கு படத்தை அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டது. வெளிநாட்டு தணிக்கைப் பணிகளில் பிரிட்டிஷ் தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துள்ளார்கள்.

எப்போதுமே ஒரு படத்தின் தணிக்கைப் பணிகள் முடிந்தவுடன், அவர்களுடைய இணையத்தில் அப்படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிடுவார்கள். அதன்படி 'மெர்சல்' படம் குறித்து பிரிட்டிஷ் தணிக்கைத் துறை கூறியிருப்பதாவது:

தமிழ் த்ரில்லர் படம். ஒரு மேஜிக் செய்பவரும், டாக்டரும் இணைந்து இந்திய மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை வெளிக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். மிதமான வன்முறை உள்ள படம்.

இவ்வாறு இணையத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x