Published : 13 Sep 2017 01:13 PM
Last Updated : 13 Sep 2017 01:13 PM
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக் உரிமையை சீன நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.
ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் கமல், கவுதமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஜீது ஜோசப் இயக்கியிருந்தார்.
தற்போது இப்படத்தின் ரீமேக் உரிமையை சீன நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. இதனால் விரைவில் சீன மொழியில் இப்படம் ரீமேக்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மோகன்லால் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "மலையாளத் திரையுலகம் பெரிய இடத்துக்கு நகர்ந்து வருகிறது. சீன நிறுவனம் ஒன்று 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருக்கிறது. இது மலையாளத் திரையுலகம் பெருமை கொள்ளும் விஷயமாகும். இதற்குக் காரணமான 'த்ரிஷ்யம்' படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT