Published : 04 Apr 2023 09:28 AM
Last Updated : 04 Apr 2023 09:28 AM

ஜூனியர் என்.டி.ஆருக்கு வில்லனாக நடிக்க சைஃப் அலி கான் மறுப்பு

சைஃப் அலி கான் | கோப்புப்படம்

பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான். இவர் பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராவணனாக நடித்துள்ளார். இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் பான் இந்தியா படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ‘ஜனதா கேரேஜ்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர். இதில், ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக நடிக்க சைஃப் அலிகான் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மற்றொரு இந்தி ஹீரோவிடம் படக்குழு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x