‘ஜன கண மன’ பட இயக்குநருடன் கைகோக்கும் நிவின் பாலி - பணிகள் தொடக்கம்

‘ஜன கண மன’ பட இயக்குநருடன் கைகோக்கும் நிவின் பாலி - பணிகள் தொடக்கம்

Published on

‘ஜன கண மன’ படத்தின் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு, மம்தா மோகன்தாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மலையாளம் கடந்து பல்வேறு மொழி ரசிகர்களிடையேயும் வரவேற்பை பெற்ற படம் ‘ஜன கண மன’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியிருந்தார்.

இந்நிலையில், அவர் அடுத்ததாக நடிகர் நிவின்பாலியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். நிவின் பாலியின் 43-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். நிவின் பாலியின் ‘பாலி ஜூனியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் மேஜிக் ப்ரேம்ஸூடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

நிவின் பாலியை பொறுத்தவரை அவரது நடிப்பில் வெளியான ‘துறமுகம்’ (Thuramukham) திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரது நடிப்பில் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in