Last Updated : 29 Dec, 2016 02:54 PM

 

Published : 29 Dec 2016 02:54 PM
Last Updated : 29 Dec 2016 02:54 PM

பவன்கல்யாண் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு

9 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிவிக்ரம் - பவன்கல்யாண் இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சீரஞ்சிவி நடித்த 'ஸ்டாலின்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் குஷ்பு. அப்படத்துக்குப் பிறகு குழந்தைகள் வளர்ப்பு, அரசியல் பணிகள் உள்ளிட்ட விஷயங்களுக்காக திரையுலகிலிருந்து விலகியிருந்தார் குஷ்பு.

அவ்வப்போது சிறு சிறு கவுரவ கதாபாத்திரங்கள் மற்றும் பாடல்களில் மட்டுமே தோன்றி வந்தார் குஷ்பு. சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிவிக்ரம் - பவன்கல்யாண் இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு துவங்கவுள்ளது.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இப்படத்துக்கு இசையமைப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார் அனிருத். முன்பாக 'அ... ஆ', 'ப்ரூஸ்லீ தி ஃபைடர்', 'துருவா' உள்ளிட்ட பெரிய முதலீட்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு வந்தது. இதில் ஒப்பந்தமாகி பின்னர் இசை சுற்றுப்பயணம் காரணமாக விலகினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x