Published : 13 Nov 2022 01:34 PM
Last Updated : 13 Nov 2022 01:34 PM

கார் மேற்கூரையில் அமர்ந்து சென்ற விவகாரம் - நடிகர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணித்ததை அடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், சாலைப்பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும் நடிகரும் ஜன சேனா கட்சித்தலவருமான பவன் கல்யாண் கடந்த வாரம் தனது காரில் சென்றார். அப்போது அவர் சினிமா பாணியில் காரின் மேற்கூரை மீது அமர்ந்து பயணித்த வீடியோ சமீபத்தில் வைரலானது. காரின் மேற்கூரை மீது அவர் அமர்ந்திருக்க இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஆதரவாளர்கள் அவரை பின் தொடர்ந்தனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பவன் கல்யாணின் இந்த செயலால் கடுப்பான போலீசார், அவரது வாகனத்தை நிறுத்தி அவரை கீழே இறக்கினர். இதையடுத்து சில கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று பாதிக்கப்பட்ட மக்களை அவர் பார்த்தார். பவன் கல்யாணின் கார் வேகமாகச் சென்றதால் பைக்கில் சென்ற சிவக்குமார் என்பவர் கீழே விழுந்ததாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சிவகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் பவன் கல்யாண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல் / பொது வழியில் சவாரி செய்தல்) மற்றும் 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலைச் செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x