Last Updated : 04 Oct, 2016 06:12 PM

 

Published : 04 Oct 2016 06:12 PM
Last Updated : 04 Oct 2016 06:12 PM

பாகுபலி 2-க்காக எடையைக் குறைத்த ராணா

'பாகுபலி - தி கன்க்ளூஷன்' படத்தின் இளம் வயது பல்வாள் தேவன் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை குறைத்திருக்கிறார் ராணா

'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 28, 2017-ல் 'பாகுபலி - தி கன்க்ளூஷன்' வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

மேலும், ''டிசம்பருக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க இருக்கிறோம். சில காட்சிகள் மற்றும் 2 பாடல்கள் மட்டும் காட்சிப்படுத்த இருக்கிறது" என்று இயக்குநர் ராஜமெளலி சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 'பாகுபலி- 2' படத்துக்காக உடலமைப்பை மாற்றியிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த மாற்றம் குறித்து ராணா, "வயதான பல்வாள் தேவன் மிகவும் உறுதியான உடலோடும், கட்டுமஸ்தாகவும் இருக்க வேண்டும். ஆகையால் 108 - 110 வரை உடல் எடையை சில காட்சிகளாக அதிகரித்தேன். ஆனால் இளமைத் தோற்றமும் மிகவும் உறுதியாகவும் ஆனால் சற்றே ஒல்லியாக இருக்க வேண்டும். ஆகையால் உடல் எடையை 92 - 93க்குள் கொண்டு வந்துள்ளேன்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்காக கடந்த 5 மாதங்களாக ராணா தினமும் இரண்டரை மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x