Published : 02 Jul 2022 09:03 PM
Last Updated : 02 Jul 2022 09:03 PM
விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் 'லைகர்'. இந்தப் படத்தில் நாயகியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். தவிர, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குத்துச்சண்டை வீரராக விஜய் தேவர கொண்ட நடித்திருக்கும் இப்படத்தில் மைக் டைசனும் நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு மணி சர்மா இசையமைக்கிறார்.
கரண் ஜோகர், பூரி ஜெகந்நாத் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பூங்கோத்துடன் நிர்வாணமாக நிற்கும் வகையிலான அந்தப் புகைப்படத்தை பதிவிட்டு, ''என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டது இந்தப் படம். நடிப்பிலும், மனதளவிலும், உடல் அளவிலும் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம். நான் எல்லாவற்றையும் உங்களிடம் தருகிறேன்! விரைவில் வருகிறது 'லைகர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ‘பிகே’ படத்திற்காக அமீர்கான் இதுபோன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பட புரமோஷனுக்கு இப்படியான புகைப்படங்களை ஏன் வெளியிட வேண்டும்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
A Film that took my everything.
As a performance, Mentally, physically my most challenging role.
I give you everything!
Coming Soon#LIGER pic.twitter.com/ljyhK7b1e1— Vijay Deverakonda (@TheDeverakonda) July 2, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT