Published : 02 Feb 2022 12:46 PM
Last Updated : 02 Feb 2022 12:46 PM

‘ராதே ஷ்யாம்’ புதிய வெளியிட்டுத் தேதி அறிவிப்பு

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக பொங்கல் வெளியீட்டிலிருந்து ‘ராதே ஷ்யாம்’ படம் தள்ளிவைக்கப்பட்டது. ‘ராதே ஷ்யாம்’ மட்டுமின்றி அஜித் நடித்துள்ள ‘வலிமை’, ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட படங்களும் தள்ளிவைக்கப்பட்டன.

தற்போது, கரோனா கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டு வருவதால், ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் மார்ச் 25ஆம் தேதியும், ‘வலிமை’ வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. அந்த வகையில் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x