Published : 27 Jan 2022 12:19 PM
Last Updated : 27 Jan 2022 12:19 PM
நெட்ஃப்ளிக்ஸின் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் 'ஷ்யாம் சிங்கா ராய்' மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியப் படம் இதுவாகும்.
ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் 'ஷ்யாம் சிங்கா ராய்'. நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சானு ஜான் வர்கீஸ், இசையமைப்பாளராக மிக்கி ஜே.மேயர் உள்ளிட்ட பலர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த ஜனவரி 21 முதல் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது முதல் இப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் வெளியானபோது பெற்ற வரவேற்பை காட்டிலும் ஓடிடியில் பல மடங்கு அதிக வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள முற்போக்கு வசனங்கள் வைரலாகி வருகின்றன. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாரம்தோறும் வெளியிடும் உலகளாவிய அளவில் டாப் 10 ஆங்கிலமல்லாத திரைப்படங்களின் பட்டியலில் 'ஷ்யாம் சிங்கா ராய்' மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ‘ஹவ் ஐ ஃபெல் இன் லவ் வித் எ கேங்ஸ்டர்’ என்ற போலந்து நாட்டுத் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியப் படம் 'ஷ்யாம் சிங்கா ராய்' மட்டுமே. இதனை முன்னிட்டு 'ஷ்யாம் சிங்கா ராய்' படக்குழுவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Seems like the whole world has been swayed by Shyam and Rosie's story. #ShyamSinghaRoy is at number 3 in our Top 10 Non-English Global Films ranking!@NameisNani @Sai_Pallavi92 pic.twitter.com/fSuQQYPToQ
— Netflix India South (@Netflix_INSouth) January 27, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT