Published : 09 Jan 2022 09:46 AM
Last Updated : 09 Jan 2022 09:46 AM
மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு காலமானார். அவருக்கு வயது 56.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது அண்ணன் ரமேஷ் பாபு. இவர் 1974ஆம் ஆண்டு வெளியான ‘சீதாராமா ராஜு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து 15 படங்களில் நடித்துள்ளார். 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ரமேஷ் பாபு தனது தம்பி மகேஷ் பாபு நடித்த ‘அர்ஜுன்’, ‘அதிதி’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
நீண்ட காலமாக கல்லீரல் தொடர்பான பிரச்சினையால் ரமேஷ் பாபு அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜன 08) 56 வயதான ரமேஷ் பாபு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
It is with deep sorrow that we announce the passing of our beloved Ramesh Babu garu. He will continue to live on in our hearts forever.
We request all our well-wishers to adhere to the COVID norms and avoid gathering at the cremation venue.
- Ghattamaneni Family— BA Raju's Team (@baraju_SuperHit) January 8, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT