Published : 17 Dec 2021 03:26 PM
Last Updated : 17 Dec 2021 03:26 PM
ஃபரா ஷிப்லாவின் சமீபத்திய போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது
2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘காக்ஷி: அம்மினிப்பிள்ளா’ படத்தின் மூலம் பிரபலமானவர் ஃபரா ஷிப்லா. சமீபத்தில் இவர் உடல் பருமன் தொடர்பான எதிர்மறை எண்ணங்களைக் களையும் நோக்கில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். ‘ப்ரிம்மிங் ஃபரா’ என்ற தலைப்பிடப்பட்ட அந்த போட்டோ ஷூட்டில் அவர் நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருந்தார்.
இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் பிலடெல்பியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான சோஃபி லெவிஸின் மேற்கோளைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் ஃபரா கூறியுள்ளதாவது:
என் உடல் உங்கள் விமர்சனத்துக்கும், விவாதத்துக்குமானதல்ல. என் உடல் உங்களது நுகர்பொருள் அல்ல. என் உடல் என்பது என்னுடைய பாத்திரம். அது என் அனுபவங்களின் காப்பகம். நான் மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய யுத்தங்களைச் சந்தித்த ஒரு ஆயுதம். காதல், வலி, போராட்டம், வெற்றி, புதிர் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நூலகம். அது தாங்கிய அனைத்தையும் உங்கள் கண்களால் வறையறுக்க இயலாது. என் உடல் மீது உங்கள் மதிப்பீட்டை வைக்க வேண்டாம். அதை என் இருப்பின் மீது வையுங்கள்
- சோஃபி லெவிஸ்
இவ்வாறு அந்தப் பதிவில் ஃபரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த போட்டோ ஷூட் தொடர்பாகத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஃபரா அளித்துள்ள பேட்டியில், “இதை நான் ஒரு கலைஞரின் பார்வையிலிருந்து அணுகியுள்ளேன். எந்தவிதத் தடையுமின்றி செயல்படும் சில புகைப்படத் தொடர்களைப் பார்க்கிறேன். நான் மிகவும் வெட்கப்படுபவள். என் உடல் அழகானது இல்லை என்று நினைக்கும் ஒரு நிலைக்கு நான் தள்ளப்பட்டடேன். இப்போது ஒரு மகிழ்ச்சியான நபராக, நான் விரும்புவதை அணிய விரும்பும் பெண்ணாக இந்த இடத்துக்கு வருவது பெரும் போராட்டமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT