Published : 09 Jun 2021 03:41 PM
Last Updated : 09 Jun 2021 03:41 PM

தெலுங்குத் திரைத் துறை ஊழியர்களுக்குத் தடுப்பூசி முகாம்: சிரஞ்சீவி முன்னெடுப்பு

தெலுங்குத் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இலவசத் தடுப்பூசி முகாமை நடிகர் சிரஞ்சீவி துவக்கியுள்ளார். அபோல்லோ 24/7 மருத்துவமனையுடன் இணைந்து இதை அவர் செய்கிறார்.

கடந்த வருடம் கரோனா நெருக்கடி ஆரம்பித்த கட்டத்திலிருந்தே தெலுங்குத் திரையுலகில் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நடிகர் சிரஞ்சீவி உதவி செய்து வருகிறார். இதற்காக கரோனா நெருக்கடி அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் நிதி திரட்டியும், தனது பெயரில் செயல்படும் அறக்கட்டளை மூலமாகவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வந்தார்.

கிட்டத்தட்ட 40,000 பணியாளர்களுக்கு நான்கு மாதத்துக்குத் தேவையான மளிகை பொருட்கள், 1 கோடி ரூபாய் நிதி, ஆக்ஸிஜன் வங்கிகள் எனத் தொடர்ந்து செய்து வரும் சிரஞ்சீவி, தற்போது இலவசத் தடுப்பூசி முகாமைத் தொடங்கியுள்ளார். அவரது கண் தானம் மற்றும் இரத்த தான வங்கிக்கான கட்டிடத்தில் இந்த முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள சிரஞ்சீவி. "இன்று முதல், கரோனா நெருக்கடி அறக்கட்டளையும், அப்போல்லோ 24/7ம்ம், சிரஞ்சீவி அறக்கட்டளையும் இணைந்து, தெலுங்குத் திரைத்துறையைச் சேர்ந்த 24 கலைப் பிரிவுகளின் பணியாளர்களுக்கும் இலவசத் தடுப்பூசி போடு முகாம் ஆரம்பமாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இதில் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தையும் ஹாஷ்டேகில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x