Published : 23 Jun 2014 05:47 PM
Last Updated : 23 Jun 2014 05:47 PM
'சச்சின்! டெண்டுல்கர் அல்ல' (Sachin! Tendulkar Alla) என்ற கன்னடத் திரைப்படத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நடிக்கிறார்.
கன்னடம், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை இயக்குபவர் மோகன் சங்கர் ஆவார்.
சச்சின் டெண்டுல்கர் ஆக விரும்பும் ஒரு சிறுவனின் கதை இது. இதில் பயிற்சியாளர் பாத்திரத்தில் வெங்கடேஷ் பிரசாத் நடிக்கிறார். சிறுவன் பாத்திரத்தில் மாஸ்டர் ஸ்னேகித்
இது பற்றி வெங்கடேஷ் பிரசாத் கூறியதாவது:
நடிகை சுகாசினிதான் என் பெயரை இந்தக் கதா பாத்திரத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். நாங்கள் குடும்ப நண்பர்கள். மோகன் சங்கருக்கு நிறைய மறுப்புகளுக்குப் பிறகே சம்மதம் தெரிவித்தேன்.
ஏனெனில் கிரிக்கெட் களம் வேறு, சினிமா களம் வேறு. பிறகு அவர் நீங்கள் பயிற்சியாளராக இருந்தபோது என்ன செய்தீர்களோ அதைத்தான் கேமரா முன்னால் செய்ய வேண்டும் என்றார்.
ஷூட்டிங்கின் போது ஒவ்வொரு முறை நான் வசனம் பேசும்போதும் இயக்குனர் மோகன் சங்கர் என்னைப் பாராட்டத் தவறியதில்லை.
அவர் மேலும் என் வேலையைக் குறைக்குமாறு நீண்ட வசனங்களைக் கொடுக்கவில்லை. நானே எனக்கு டப்பிங் பேசினேன். நான் கன்னடக்காரர் என்றாலும் ஆங்கிலத்தையே சில ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தேன், இதனால் கன்னட உச்சரிப்புப் பிரச்சனை இருந்தது. ஆனாலும் மோகன் சங்கரின் தொடர் ஊக்குவிப்பு மூலம் அதையும் ஒரு வழியாக முடித்து விட்டேன். என்றார் பிரசாத்.
அவர் மேலும் கூறுகையில், நான் நடிகன் அல்ல, கிரிக்கெட்டிற்குத்தான் நான் முன்னுரிமை அளிப்பேன் என்றும், நடிகர்கள் கூறுவது போல் ‘நல்ல கதை இருந்தால் நடிப்பேன்’ என்று ஒரு போதும் நான் கூறமாட்டேன் என்றும் கூறினார்.
இந்தப் படத்தில் முன்னாள் வீரர் ஸ்ரீநாத்தும் நடிக்கிறார். ஆனால் வெங்கடேஷ் பிரசாத்திற்கு பெரிய ரோல் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT