Last Updated : 29 Oct, 2015 06:13 PM

 

Published : 29 Oct 2015 06:13 PM
Last Updated : 29 Oct 2015 06:13 PM

வினித் சீனிவாசன் இயக்கத்தில் கெளதம் மேனன்

மலையாள இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நிவின் பாலி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்.

'மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்', 'தட்டத்தின் மறயத்து', 'திரா' உள்ளிட்ட மலையாள படங்களை இயக்கியவர் வினித் சீனிவாசன். மலையாளத் திரையுலகில் பல தளங்களில் இயங்கும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார்.

சமீபத்தில் வெளியான 'ஒரு வடக்கன் செல்ஃபி' படத்துக்கு கதை எழுதி நடித்திருக்கிறார். அக்கதையின் நாயகனாக வரும் நிவின் பாலி, கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக சேர நினைப்பதுப் போல திரைக்கதை அமைத்திருந்தார்.

இந்நிலையில், வினித் சீனிவாசன் தனது அடுத்த படத்துக்கான படக்குழுவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். நிவின் பாலி நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் ரஞ்சி பனிகர், கெளதம் மேனன், ஸ்ரீநாத் பாசி, சாய் குமார், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம் (Jacobinte Swargarajyam) என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படம் 2016 கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

தமிழில் பல்வேறு படங்களில் சிறு வேடங்களில் கெளதம் மேனன் தோன்றிருந்தாலும், மலையாளத்தில் அவர் நடிக்கவிருக்கும் முதல் படமாக இப்படம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x