Published : 18 Oct 2020 04:44 PM
Last Updated : 18 Oct 2020 04:44 PM

ரமேஷ் வர்மா இயக்கத்தில் ரவிதேஜா

ஹைதராபாத்

ரமேஷ் வர்மா இயக்கத்தில் ரவிதேஜா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு 'கில்லாடி' எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்தாண்டு ஜனவரி 24-ம் தேதி ரவி தேஜா நடிப்பில் வெளியான படம் 'டிஸ்கோ ராஜா'. இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து 'க்ராக்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ரவி தேஜா.

கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கரோனா அச்சுறுத்தல் வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரவி தேஜா.

இதன் படப்பூஜை இன்று (அக்டோபர் 18) காலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. 'கில்லாடி' என்று பெயரிடப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரியவுள்ளார். மீனாட்சி செளத்ரி மற்றும் டிம்பிள் ஹயாத்தி ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

'க்ராக்' படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, 'கில்லாடி' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ரவி தேஜா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x