Published : 26 Sep 2020 03:12 PM
Last Updated : 26 Sep 2020 03:12 PM
எஸ்பிபியின் ஒலியின் தீவிரம் மயக்கும் தன்மை கொண்டது என்று இயக்குநர் ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தன.
இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபி மறைவுக்கு இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்றும் புகார் தெரிவிக்காத, பொறுமையான மனிதர். சமாதானவாதி. குழந்தை போன்ற சிரிப்போடு, கள்ளமில்லாத மனதோடு, தூய்மையான அன்போடு நம் மனதை வென்றார். அவரது ஒலியின் தீவிரம் மயக்கும் தன்மை கொண்டது. இன்னும் பல தலைமுறைகளை உங்கள் குரல் மயக்கும். உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட திறமையான இசைக்கலைஞர்".
இவ்வாறு ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
A person who never complains , patient & pacifist.He conquered our mind with a baby like chuckle,an innocent mind and pure love . The intensity of his sound was mesmerising !
For generations your voice will continue to mesmerise.
He was truly a gifted musician
Om Shanti ... pic.twitter.com/1qxfdyITsc— priyadarshan (@priyadarshandir) September 25, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT