Published : 10 May 2020 08:37 PM
Last Updated : 10 May 2020 08:37 PM

வைரலான டிக்-டாக் வீடியோ: டேவிட் வார்னருக்கு நடிக்க வாய்ப்பளிக்க முன்வந்த பூரி ஜெகந்நாத்

டிக்-டாக் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, டேவிட் வார்னருக்கு நடிக்க வாய்ப்பளிக்க முன்வந்துள்ளார் இயக்குநர் பூரி ஜெகந்நாத்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் தான் தற்போதைய சமூக வலைதளத்தின் ட்ரெண்ட்டாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் 'புட்ட பொம்மா' பாடலுக்கு தனது மனைவியுடன் டிக்-டாக்கில் நடனமாடி பதிவேற்றம் செய்தார். அது பெரும் வைரலானது. டேவிட் வார்னர் மற்றும் அவரது மனைவியின் நடனத்தை விட, இருவருக்கும் பின்னால் அவரது குழந்தையின் குறும்புத்தனம் ரசிக்க வைத்தது.

இன்று காலை முதலே டேவிட் வார்னரின் டிக்-டாக் வீடியோ தான் ட்ரெண்ட். இந்த முறையில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'போக்கிரி' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி வசனத்தைப் பேசி டிக்-டாக் செய்து வெளியிட்டார். அதுவும் ஐபிஎல் போட்டியில் தான் விளையாடும் ஹைதராபாத் அணியின் உடையில் இந்த டிக்-டாக் வீடியோவை செய்திருந்தார்.

இந்த டிக் டாக் வீடியோவை பதிவேற்றி "என்ன படம் என்று தெரிகிறதா? நான் முயற்சி செய்தேன்" என்று தெரிவித்தார். உடனே மகேஷ் பாபு மற்றும் பூரி ஜெகந்நாத் ரசிகர்கள் பலரும் இதை ட்ரெண்ட் செய்ய தொடங்கினார்.

டேவிட் வார்னரின் இந்த பதிவுக்கு 'போக்கிரி' படத்தின் இயக்குநர் பூரி ஜெகந்நாத் "டேவிட்.. இதுதான் நீங்கள்.. உறுதியும் ஆக்ரோஷமும்.. இந்த வசனம் உங்களுக்குத்தான் சரியாக பொருந்தும். நீங்கள் ஒரு நடிகராகவும் சிறப்பாக நடிப்பீர்கள். என் படத்தில் நீங்கள் ஒரு காட்சியில் வரவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தனது வாழ்த்தில் குறிப்பிட்டார்.

பூரி ஜெகந்நாத்தின் பதிவுக்கு பதிலாக டேவிட் வார்னர் "முயற்சி செய்கிறேன் சார், சன் ரைசர்ஸ் ரிலீஸ் அல்லது விநியோகம் செய்கிறதா என்று பார்க்கவேண்டும்" என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x