Published : 02 Mar 2020 05:45 PM
Last Updated : 02 Mar 2020 05:45 PM
'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு 'வக்கீல் சாப்' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
திரையுலகிருந்து அரசியல் களத்துக்குச் சென்ற பவன் கல்யாண், மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார். அவருடைய முதல் படமாக 'பிங்க்' ரீமேக் உருவாகி வருகிறது. ஸ்ரீராம் வேணு இயக்கி வரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பவன் கல்யாண்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் பவன் கல்யாணுடன் நடித்து வருகிறார்கள்.
தலைப்பிடப்படாமல் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (பிப்ரவரி 2) மாலை 5 மணியளவில் வெளியாகும் என அறிவித்தது படக்குழு. அதன்படி 'வக்கீல் சாப்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பவன் கல்யாண் ஸ்டைலாக புத்தகம் படிப்பது போன்று ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்துள்ளது படக்குழு.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பவன் கல்யாண், திரையுலகிற்குத் திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியீட்டைக் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனமும், போனி கபூரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
Sri Venkateswara Creations in association with Bayview Projects proudly presents Power Star @PawanKalyan as #VakeelSaab.#PSPK26FirstLook #PSPK26FirstLookFestival@SVC_official #SriramVenu @MusicThaman#PSPK26 @BayViewProjOffl pic.twitter.com/W4GxGqEFhX
— Boney Kapoor (@BoneyKapoor) March 2, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT