Published : 19 Jan 2020 07:33 PM
Last Updated : 19 Jan 2020 07:33 PM
வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் படக்குழுவினர். இதன் தொடர்ச்சியாக நடந்த ஹேஷ்டேக் யுத்தத்தினை சித்தார்த் கடுமையாகச் சாடியுள்ளார்.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 11-ம் தேதி வெளியாகியுள்ள படம் 'சரிலேரு நீக்கெவரு'. இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூல் ரீதியில் வரவேற்பு கிடைத்தது.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 12-ம் தேதி வெளியாகியுள்ள படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
படம் வெளியானதிலிருந்தே இரண்டு படக்குழுவினருமோ போட்டிப் போட்டுக் கொண்டு படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்டு வருகிறார்கள். இரண்டு படக்குழுவினருக்குமே எங்கள் படம் 'பாகுபலி 2' வசூலுக்குப் பிறகு அதிகமாக இந்த விநியோக ஏரியாவில் வசூல் செய்திருக்கிறது என்று அறிவித்து வருகிறார்கள்.
தற்போதைய இறுதிக்கட்ட போஸ்டர் யுத்தத்தின்படி 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படம் உலக அளவில் மொத்த வசூலில் 180 கோடி ரூபாயைத் தாண்டி விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதே போல் 'சரிலேரு நீக்கெவரு' திரைப்படம் உலக அளவில் 112 கோடி ரூபாய் ஷேர் தொகையாக வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இரண்டு படக்குழுவினருமே போட்டி போட்டு அறிவித்து வருவது ட்விட்டரில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது.
இதனிடையே, மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இருவருமே ஒருவருக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள். #FakeKaBaapAlluArjun மற்றும் #FakeQweenMaheshbabu ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகத் தொடங்கின. இதனை சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார். லட்சக்கணக்கில் ட்வீட்கள், கடவுளே சினிமாவைக் காப்பாற்று. இந்த மனிதர்களுக்கு என்னவாயிற்று என்று தனது சாடலில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT