Published : 13 Jan 2020 08:27 PM
Last Updated : 13 Jan 2020 08:27 PM
'சரிலேரு நீக்கெவரு' மற்றும் ’அலா வைகுந்தபுரம்லோ’ படக்குழுவினர் வசூல் நிலவரம் தொடர்பாக போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 11-ம் தேதி வெளியாகியுள்ள படம் 'சரிலேரு நீக்கெவரு'. இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூல் ரீதியில் வரவேற்பு கிடைத்தது. இதனால் நேற்று (ஜனவரி 12) படக்குழுவினர் வெற்றி விழாவை பத்திரிகையாளர் மத்தியில் கொண்டாடினர்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 12-ம் தேதி வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் இன்று (ஜனவரி 13) இப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இரண்டு படக்குழுவினரும் போட்டி போட்டுக் கொண்டு படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்டு வருகிறார்கள். 'சரிலேரு நீக்கெவரு' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அனில் சுக்ரா தனது ட்விட்டர் பதிவில், ''இந்தப் படத்தில் முதலீடு செய்த விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் சுமார் 50% முதலீடு முதல் நாளே வந்துவிட்டது. மேலும், முதல் நாள் உலக அளவில் கிடைத்த வசூலில் ஷேர் தொகை 46.77 கோடி ரூபாய்'' என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனை முன்வைத்து 'அலா வைகுந்தபுரம்லோ' படக்குழுவினரோ, தங்களுடைய படத்தின் முதல் நாள் வசூல், உலக அளவில் 85 கோடி ரூபாய் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த இரண்டு படக்குழுவினரின் போட்டி அறிவிப்பால் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் சண்டை உருவாகியுள்ளது.
Happy to inform that for the first time in the history of TFI all the the exibitors buyers distributors got more than 50 percent of their investment on the 1 st day itself. Never Before Ever after BLOCKBUSTER KA BAAP. And this is just the beginning. pic.twitter.com/uoZscwt1Ya
— Anil Sunkara (@AnilSunkara1) January 12, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT