Published : 09 Jan 2020 06:49 PM
Last Updated : 09 Jan 2020 06:49 PM
பாலகிருஷ்ணா உதவி செய்யவில்லை என்று 'லட்சுமியின் என்.டி.ஆர்' படத்தில் நடித்த நடிகர் விஜய் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய படம் 'லட்சுமியின் என்.டி.ஆர்'. இதில் என்.டி.ஆராக நடித்தவர் விஜய் குமார். இவருடைய மனைவியின் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு பாலகிருஷ்ணா உதவி செய்ததாகச் செய்திகள் வெளியாகின.
இதனை பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் பலரும் கொண்டாடித் தீர்த்தார்கள். ஆனால், இந்தச் செய்தி தொடர்பாக பாலகிருஷ்ணாவிடமிருந்து தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. உதவி எதிர்பார்க்கவும் இல்லை என்று விஜய் குமார் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார். விஜய் குமாரின் இந்தப் பேட்டியின் மூலம் இந்தச் செய்தி தொடர்பாக வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த 'ரூலர்' பெரும் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு வசூல் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது போயப்பட்டி சீனு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்குத் தயாராகி வருகிறார் பாலகிருஷ்ணா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT