Published : 26 Dec 2019 03:27 PM
Last Updated : 26 Dec 2019 03:27 PM
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
'டியர் காம்ரேட்' படத்தைத் தொடர்ந்து 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இஸ்மார்ட் ஷங்கர்' வெற்றிக்குப் பிறகு பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள படம் என்பதால், இந்தப் படத்தைப் பலரும் எதிர்நோக்கியுள்ளனர். இதில் நாயகியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா படத்தில் ஜான்வி கபூர் நடித்தால், தென்னிந்தியத் திரையுலகில் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்வி கபூர் அளித்த பல பேட்டிகளில், உங்களுக்கு யார் மீது ஈர்ப்பு என்ற கேள்விக்கு விஜய் தேவரகொண்டா என்று பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்தே அவரை நடிக்க வைக்க பூரி ஜெகந்நாத் அணுகியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT