Published : 30 Oct 2019 12:31 PM
Last Updated : 30 Oct 2019 12:31 PM
தெலுங்கில் 'தெறி' ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மறைந்த இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. தாணு தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக இதன் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. நீண்ட நாட்களாக இந்தத் தகவல் செய்தி என்ற அளவிலேயே இருந்தது. தற்போது இது உறுதியாகியுள்ளது.
தயாரிப்பாளர் மது தயாரிக்கும் 'தெறி' ரீமேக்கை கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார். விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளார். தற்போது ஆனந்த் இயக்கத்தில் 'டிஸ்கோ ராஜா' எனும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரவி தேஜா. இதனைத் தொடர்ந்து 'தெறி' ரீமேக்கிற்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT