Published : 07 Aug 2017 12:19 PM
Last Updated : 07 Aug 2017 12:19 PM
நடிகை சாய் பல்லவியின் முதல் தெலுங்கு படமான ‘ஃபிடா’, வெளியான இரண்டே வாரங்களில் ரூ. 60 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இயக்குநர் சேகர் காமுல்லா இயக்கத்தில், வருண் தேஜ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஃபிடா’. காதல் கதையான இதன் மூலம் சாய் பல்லவி தெலுங்கில் அறிமுகமானார். முதல் இரண்டு வாரங்களில் விநியோகஸ்தர்களின் பங்கு மட்டும் ரூ. 34.8 கோடியாக இருக்கிறது. அனைத்து விதமான ரசிகர்களையும் படம் கவர்ந்துள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜூ தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலும் விரைவில் 2 மில்லியன் டாலர்களைப் படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தோல்விப் படங்களை தந்து வந்த இயக்குநர் சேகர் காமுல்லாவின் சினிமா வாழ்க்கையை காப்பாற்றியதோடு, அவரது சினிமாக்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் ‘ஃபிடா’ படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT