Last Updated : 30 Aug, 2017 02:59 PM

 

Published : 30 Aug 2017 02:59 PM
Last Updated : 30 Aug 2017 02:59 PM

திரையுலகினர் பாராட்டில் அர்ஜுன் ரெட்டி: வசூலும் குவிப்பு

தெலுங்கு திரையுலகில் வெளியாகியுள்ள 'அர்ஜுன் ரெட்டி' பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி, அனைத்து இடங்களில் வசூலையும் குவித்து வருகிறது.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பார்த்து தங்களுடைய சமூகவலைத்தளத்தில் பாராட்டி புகழந்து வருகிறார்கள். ஆந்திராவில் வசூலைக் குவித்து வரும், இப்படம் அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இப்போதுதான் 'அர்ஜுன் ரெட்டி' படம் பார்த்தேன். காதல் கதைகள் எனக்கு ஏற்றவை அல்ல. என்றாலும் படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு அட்டகாசம். வாழ்ந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, ஷாலினி, நண்பர்களாக நடித்தவர்கள் என அனைவரும் சிறப்பாக, இயல்பாக நடித்திருந்தார்கள். நல்ல பின்னணி இசை மற்றும் அழகான ஒளிப்பதிவு, அற்புதமாக எழுதப்பட்ட வசனங்கள். இந்தக் குழுவை அற்புதமாக கையாண்ட இயக்குநர் சந்தீப் வாங்காவுக்கு அனைத்து பாராட்டுகளும் போய் சேரவேண்டும். இந்த மிகப்பெரிய வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்..

இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x