Published : 04 Nov 2014 03:15 PM
Last Updated : 04 Nov 2014 03:15 PM

கேரள பட விழாவில் சிறப்பிடம் பெறும் பண்ணையாரும் பத்மினியும்

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் 'தற்போதைய இந்திய சினிமா' என்ற பிரிவில் திரையிடுவதற்கு, 'பண்ணையாரும் பத்மினியும்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் டிசம்பர் 12 முதல் 19 வரை 19-வது கேரள சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில், சமகால இந்திய சினிமாவைப் பிரதிபலிக்கும் வகையில் 'தற்போதைய இந்திய சினிமா' என்ற பிரிவு இடம்பெற்றுள்ளது.

இந்தப் பிரிவுக்கு இந்தியில் இருந்து 3 படங்களும், பெங்காலியில் இருந்து 2 படங்களும், தமிழ் மற்றும் மராத்தியில் இருந்து தலா ஒரு படமும் தேர்வாகியுள்ளன. இதில், தமிழில் தேர்வாகியிருக்கும் படம் 'பண்ணையாரும் பத்மினியும்'.

மொத்தம் 55 படங்களில், இந்தப் பிரிவில் 7 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, பழம்பெரும் இயக்குநர்கள் லெனின் ராஜேந்திரன், கே.மதுபால் மற்றும் எம்.சி.ராஜ நாராயணன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு தெரிவித்துள்ளது.

மராத்தியில் ஏக் ஹஸார்ச்சி நோட் (Ek Hazarachi Note) இந்தியில் தக் உஜ்லா (Dagh Ujala), மித் ஆஃ கிளியோபாட்ரா (Myth of Kleopatra) மற்றும் கவுரி ஹாரி தஸ்தன் (Gouri Hari Dastan), பெங்காலியில் '89', நயன்சம்பர் தின் ராத்ரி (Nayanchampar Din Ratri) ஆகிய படங்கள் 'தற்போதைய இந்திய சினிமா'வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x