Published : 20 Feb 2017 09:13 AM
Last Updated : 20 Feb 2017 09:13 AM
நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17-ம் தேதி இரவில் நடிகை பாவனா படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை மார்ட்டின் என்பவர் ஓட்டி வந்தார். அத்தானி என்ற இடத்தில் வந்த போது பின்னால் வந்த வேன், பாவனாவின் கார் மீது மோதியது. மார்ட்டின் காரை நிறுத்தினார். அப்போது வேனில் வந்த மூவர் பாவனாவின் காரில் ஏறினர். அவர்கள் ஏறியதும் கார் புறப் பட்டது. பின்னர் அந்த மூவரும் பாவனாவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர். அவருடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம், வீடியோ எடுத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து பாவனா அளித்த புகாரின்பேரில் கார் ஓட்டுநர் மார்ட்டின், வடிவால் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் ஆகிய மூவரை கேரள தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். பாவனாவிடம் இதற்கு முன் ஓட்டுநராக இருந்த சுனில் குமார் மற்றும் மணிகண்டன், விஜீஸ் ஆகியோரைத் தேடி வரு கின்றனர். குற்றவாளிகள் பயன் படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் களமசேரி மாஜிஸ்திரேட் முன்பு பாவனா நேற்று வாக்குமூலம் அளித்தார். அவருக்கு மருத்துவ பரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்விவகாரம் கேரளா முழு வதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர் பாக முதல்வர் பினராயி விஜயன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பாவனா வழக்கில் தொடர் புடைய யாரையும் தப்பவிடமாட் டோம் என்று உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக மலையாள நடிகர், நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோகன்லால்: நடிகையை தாக்கியவர்கள் மனிதர்கள் அல்ல, மிருகங்களைவிட கேவலமான வர்கள். அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.
மம்முட்டி: நீங்கள் (பாவனா) மட்டும் தனியாக போராடவில்லை. உங்களோடு அனைத்து நடிகர், நடிகைகளும் இருக்கிறோம்.
பிருத்விராஜ்: சமூகத்தில் ஒருவனாக வெட்கி தலைகுனி கிறேன். தாக்குதல் சம்பவம் தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். இந்த துயரம் வேறு யாருக்கும் நேரக்கூடாது.
சுரேஷ் கோபி: இனிமேல் எந்த பெண்ணைப் பார்த்தும் யாரும் கையைக்கூட தூக்க முடியாத வகையில் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவின் பாலி: தனக்கு நேர்ந்த அவலத்தை மறைக்காமல் போலீஸில் புகார் செய்த அவரின் தைரியத்தைப் பாராட்டுகிறேன். இதுபோன்ற கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது
துல்கர் சல்மான்: கேரளாவில் வாழும் அனைத்து பெண்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
நடிகை ஷிவதா: சில ஆண்களின் செயல் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலைகுனியச் செய்துள்ளது. நாம் விழித்துக் கொள்ள இதுதான் சரியான நேரம். பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நடிகை மஞ்சுவாரியார்: பாவனாவின் தைரியத்தைப் பாராட்டி அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
ஆதரவு கூட்டம்: நடிகை பாவனாவுக்கு ஆதரவு தெரி விக்கும் வகையில் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் கூட்டம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் திலீப், சித்திக், மம்முட்டி, நடிகை மஞ்சுவாரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT