Published : 08 Apr 2019 01:09 PM
Last Updated : 08 Apr 2019 01:09 PM

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா

அல்லு அர்ஜுனின் 20-வது படத்தில், ஹீரோயினாக ராஷ்மிகா மண்டன்னா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘நா பேரு சூர்யா, நா இல்லு இண்டியா’. வக்கந்தம் வம்சி இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் மே மாதம் ரிலீஸானது.

அதனைத் தொடர்ந்து திரிவிக்ரம் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இன்னும் இரண்டு படங்களின் தலைப்புமே வெளியாகவில்லை.

சுகுமார் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியானது. இந்நிலையில், அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த ராஷ்மிகா மண்டன்னா, ‘காம்ரேட்’ படத்திலும் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ளார்.

மேலும், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மண்டன்னா. இதுதான் அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம்  என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (ஏப்ரல் 8) அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஐகான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, ஸ்ரீராம் வேணு இயக்குகிறார். அல்லு அர்ஜுனின் 21-வது படம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x