Last Updated : 24 Oct, 2018 05:13 PM

 

Published : 24 Oct 2018 05:13 PM
Last Updated : 24 Oct 2018 05:13 PM

இயக்குநர் மீது மீடூ புகார்: திரைப்பட விழாவில் படத்தைத் திரையிடாமல் திரும்பும் பாலகெம்பா தயாரிப்பாளர்கள்

இயக்குநர் மீது மீ டூ புகார் எழுந்ததால் சர்வதேச விருதுகள் பல பெற்றும்கூட நாளை தொடங்க உள்ள மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ''பாலகெம்பா'' படத்தை திரையிடாமலே திரும்பவேண்டிய நிலைக்கு தயாரிப்பாளர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

புகழ்பெற்ற திதி படத்தின் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியவர் எர்ரே கவுடா. இவர் சமீபத்தில் பாலகெம்பா படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படமும் திதி படத்தைப் போல பல்வேறு உலக விருதுகளை வென்று வந்துள்ளது.

ஹாலந்து நாட்டில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் ''ஒரு வளமான கிராமிய கலாச்சாரப் பின்னணியில் உலகளாவிய கருத்துக்களை நுட்பமாகவும், சுவைபடவும் பாலகெம்பா கன்ன திரைப்படத்தில் வழங்கியதற்காக'' சிறந்த இயக்குநருக்கான விருதை பெறும் எர்ரே கவுடா.

 

ஸூ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் தாங்கள் மீடூ இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்து வருவதாகவும் அதனாலேயே திரைப்படவிழாவில் பங்கேற்க இயலாமல் படத்தை திரும்பப்பெற்றுக் கொண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

''ஸூ எண்டெர்டெயின்மெண்ட் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் நாங்கள் மீ டூ இயக்கத்திற்கு முழுமையான எங்கள் ஆதரவை வழங்க விரும்புகிறோம். மக்கள் அனைவரும் சமம் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நமது சமுதாயத்தை ஒரு பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக மாற்றுவதற்கு மீ டூ இயக்கத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

மீடூ குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் தனக்கு சம்பந்தமில்லாததுபோல இருப்பதுபோல் தெரிகிறது. குற்றச்சாட்டு குறித்து கவுடா தனது அறிக்கையை இன்னும் கொடுக்கவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.

இக்குற்றச்சாட்டு கேள்விப்பட்டு நாங்கள் மிகுந்த வருத்தத்திற்கு ஆளானோம். இயக்குநர் எர்ரெ கவுடாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ''பாலகெம்பா'' படத்தில் முற்போக்கு கருத்துக்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்பட்டதோ, அதேபோல அப்படத்தின் தயாரிப்பாளர்களான நாங்கள் இவ்விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று உணர்கிறோம்.

இயக்குநர் மீது சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டில் உண்மைகள் தெளிவாகும்வரை வரை எங்கள் திரைப்படத்தை நாங்கள் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம். இதேபோல வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ள தரமசாலா சர்வதேச திரைப்பட விழாவும் மிகுந்த சகிப்புத்தன்மையோடு அனைவரையும் வரவேற்கும் இடமாக இருக்கிறது. ஆனால் அதை துஷ்பிரயோகம் செய்ய நாங்கள் விரும்பவில்லை.

எரா கவுடா இயக்கிய படமான பாலகெம்பா, டிஐஎஃப்பின் நிறைவு விழா படமாக திரையிடப்படும் என அறிவித்திருந்தனர். எர்ரே கவுடாக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, டி.ஐ.எஃப்.எப்பில் பாலகெம்பா திரையிடப்படமாட்டாது. நாங்களும் விழாவின் எத்தகைய நிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டோம்.''

இவ்வாறு தங்கள் அறிக்கையில் ஸூ எண்டர்டெயின்ட்மெண்ட் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை மும்பை திரைப்பட விழாவை ஏற்பாடு செய்து நடத்திவரும் MAMI தன்னுடைய ட்விட்டர் தளத்திலும் பகிர்ந்துகொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x