Published : 07 Apr 2025 06:29 AM
Last Updated : 07 Apr 2025 06:29 AM

நடிகர் பிருத்விராஜை ​​தொடர்ந்து ‘எம்புரான்’ தயாரிப்பாளருக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ்

மோகன்லால் நடிப்பில் பிருத்​வி​ராஜ் இயக்​கிய படம், ‘எம்​பு​ரான்’. மார்ச் 27-ல் இந்​தப் படம் வெளி​யானது. இதில் 2002-ம் ஆண்டு நடந்த குஜ​ராத் கலவரத்தை மையப்​படுத்தி சில காட்​சிகள் இடம் பெற்​றன. வில்​லன் பெயரை 'பாபா பஜ்ரங்​கி' என வைத்​தனர். சில இடங்​களில் வரும் வசனங்​களும் இந்​துக்​களின் உணர்​வு​களைப் புண்​படுத்​து​வ​தாக உள்​ளது என்று எதிர்ப்பு எழுந்​தது. இதையடுத்​து, இந்​தப் படத்​தின் 3 நிமிட சர்ச்​சைக் காட்​சிகள் நீக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில் இதன் தயாரிப்​பாளர்​களில் ஒரு​வ​ரான கோகுலம் கோபாலன் வீட்​டில் சில நாட்​களுக்கு முன் அமலாக்​கத்​துறை சோதனை நடத்​தி​யது. இதையடுத்து ‘எம்​பு​ரான்’ படத்​தின் இயக்​குநர். நடிகர் பிருத்வி ராஜுக்கு வரு​மானவரித்​துறை நோட்​டீஸ் அனுப்​பியது.

இப்​போது இந்​தப் படத்​தின் இன்​னொரு தயாரிப்​பாள​ரான ஆண்​டனி பெரும்​பாவூருக்கு வரு​மான வரித்​துறை நேற்று நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. ‘லூசிஃபர்’, ‘மரைக்​காயர்’ ஆகிய படங்​களின் பணப் பரிவர்த்​தனை விவரங்​களைக் கேட்​டும் ‘எம்​பு​ரான்’ படத்​தின் வெளி​நாட்டு உரிமை விவரங்​கள், மோகன்​லாலுக்கு துபா​யில் ரூ.2.5 கோடி கொடுக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படும் பண விவரங்​களைக் கேட்டு இந்த நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாகக்​ கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x